ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் சதி: மத்தியபிரதேச விவசாயிகள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மத்தியபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது எதிர்க்கட்சியினரின் சதி என்றும் உண்மையில் அத்தகைய போராட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் மத்திய பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விவசாயிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கினர். மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

ராஷ்ட்ரிய கிசான் மஹாசங்க் (ஆர்கேஎம்) தலைமையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை நகர்ப்புறங்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதை விவசாயிகள் நிறுத்தி உள்ளனர். இதனால் காய்கறிகள், பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

இதனிடையே, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், “விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

அதேநேரம் கடந்த ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு அளித்தன. ஆனால் இப்போது சில விவசாய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, இந்தப் போராட்டத்திலிருந்து விலகி இருப்பதாக, 193 விவவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் சமன்வய் சமிதி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநில விவசாயிகள் ட்விட்டரில், “சாதாரண நாளைப் போலவே உணர்கிறோம். நாங்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. எந்தப் போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்கவில்லை. விவசாயிகள் போராட்டம் என்பது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதி” என பதிவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்