பாதுகாப்புத் துறை அமைச்சர் இருக்கிறாரா? - சிவசேனாவின் ‘சாம்னா’ தலையங்கத்தில் கேள்வி

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் வன்முறை தொடர்கதையாக உள்ள நிலையில், நம் நாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் சிவசேனா, மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். ஆனாலும் சிவசேனா தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

முகலாய பேரரசரான அவுரங்கசீப் இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை சீரழிக்க வந்தவர் என கூறி வருகிறோம். ஆனால், காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பை மதிக்கிறோம். தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்ட அவருடைய உண்மையான தேசப்பற்றை மத்திய அரசு கவுரவிக்க வேண்டும்.

எந்தத சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் என்று முப்படைத் தளபதிகள் கூறி வருகின்றனர். ராணுவ வலிமை மீது நாம் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் மிகவும் பலவீனமான ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். இத்துறைக்கு அமைச்சர் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்