காலாவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு; விநியோகஸ்தர் அலுவலகம் சூறை

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் ’காலா’ படம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட விநியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புகுந்த கன்னட அமைப்பினர் உள்ளே இருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை வெளியாக உள்ள‌து. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

’காலா’ படத்துக்கு கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு எழுந்துள்ள போதிலும் தயாரிப்பாளர் தனுஷ் உயர் நீதிமன்றத்தை நாடியதில் படம் வெளியிடப்பட்டால் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வெளியிட முடிவு செய்தனர். இதனால், கர்நாடகாவிலும் நாளை 150 திரையரங்குகளில் காலா படம் வெளியாவதாக தகவல் வெளியானது.

’காலா’ படத்துக்கு எதிர்ப்பாக கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியைக் கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனது நிலையை விளக்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘ 'காலா' படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. 'காலா' படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’’ எனk கூறினார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தபோதிலும், சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் 'காலா' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக பெங்களூரு நகரில் மும்பையைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது.

அதேசமயம் சில கன்னட அமைப்புகள் தொடர்ந்து ’காலா’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ‘சி’ நிறுவனம் ’காலா’வை வெளியிட உள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நிறுவனத்தை முற்றுகை இட்ட கன்னட அமைப்பினர் அலுவலகத்தை சூறையாடினர்.

அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். போஸ்டர்களை வெளியே கொண்டுவந்து கிழித்தெறிந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்