நோயாளியை போர்வையில் கட்டி இழுத்த கொடூரம்: அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவலம் - வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் தரப்படாததால் அவரை போர்வையில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நந்தட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர் கால்முறிவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் காலில் கட்டுப்போட்டு கட்டினர். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிச் செல்ல அனுமதி அளித்தனர். அறையில் இருந்து மருத்துவமனையின் வெளியே நின்ற வாகனத்திற்கு அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் தருமாறு அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெட்ச்சர் ஏதும் இல்லை எனக் கூறி மறுத்து விட்டனர். அவரை தூக்கிச் செல்ல முடியாத சூழலில் அவரது உறவினர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த போர்வையை பட்டி அவரை தர தர வென இழுத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் இந்த காட்சியை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த காட்சியை வீடியோ எடுத்த சிலர் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. தகவல் வெளியானதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி ஏன் ஏற்படுத்தி தரவில்லை என மருத்துவகல்லூரியின் நிர்வாக அதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளது.

மேலும் மகாராஷ்டிர அரசு மருத்துவத்துறையும் சம்பந்தப்பட்ட மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக ஸ்ட்ரெச்சர் வசதி செய்து தரவும் உத்தரவிட்டுள்ளது.

-

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

42 mins ago

விளையாட்டு

48 mins ago

வலைஞர் பக்கம்

1 min ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்