சொந்த துறையை பற்றி பேசாத அமைச்சர்கள்; வேடிக்கையான மத்திய அரசு: மணிஷ் திவாரி கிண்டல்

By ஐஏஎன்எஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சர்கள் மற்ற துறை சார்ந்த கருத்துக்களை தெரிவிப்பதில் உள்ள ஆர்வம் தங்கள் துறை சார்ந்து தெரிவிப்பதில்லை எனவே அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்புகள் மறுவரையறை  செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இது உண்மையில் வேடிக்கையான ஒரு அரசு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேஸ் புக் பதிவில் சட்ட நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவிக்கிறார். சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாதுகாப்பு விவகாரங்களில் அழுத்தம் கொடுக்கிறார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித் துறை பற்றி கருத்து வெளியிடுகிறார். தங்கள் சொந்த துறையின் விவகாரங்கள் குறித்து எந்த அமைச்சரும் பேசுவதில்லை. அதனால் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புகள் மாற்றியமைத்து விடலாம்’’  எனக் கூறியுள்ளார்.

நீதிமன்ற நியமனங்களில் அரசின் பங்கு என்பது கடந்த கால அனுபவங்களில் இல்லை என்றே நீதித்துறை கருதுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் தனது இணையதளத்தில் ''உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான கொலீஜியத்திற்கு தகுந்த உள்ளீடுகளுடன் பரிந்துரை செய்ய மத்திய அரசுக்கு உரிமை உண்டு'' என்று பதிவிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்