மின்சாரத் திருட்டு விவகாரத்திலும் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் பேசிய உ.பி.பாஜக எம்.எல்.ஏ.: அரசு அதிகாரிக்கு மிரட்டல்

By செய்திப்பிரிவு

‘மின் திருட்டில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் குப்தா மின்சாரத்துறை அதிகாரி ஒருவரை தொலைபேசியில் மிரட்டியது வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

அரசுப் பொறியாளர் அவினாஷ் சிங் பதிவு செய்த இந்த தொலைபேசி அழைப்பில் கௌசாம்பி மாவட்ட பாஜக எம்.எல்.ஏ.சஞ்சய் குப்தா, மின் திருட்டில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மிரட்டியது தெரியவந்துள்ளது.

“ஏப்ரல் 1 முதல் எனக்கு விவரங்கள் வேண்டும். எவ்வளவு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற விவரம் தேவை. நீங்கள் இடமாற்றம் பெற்றாலும் அது உங்களைக் காப்பாற்றாது. நீங்கள் உ.பியில் எந்த மூலையிலிருந்தாலும் விசாரணை நடத்தப்படும். முஸ்லிம் பகுதிக்கு நேரடியாகச் சென்று எவ்வளவு மின் திருட்டு நடந்துள்ளது என்று பாருங்கள்” என்று சஞ்சய் குப்தா, மின்சாரத்துறை அதிகாரியிடம் காச்மூச்சென்று சத்தம் போட்டது பதிவாகியுள்ளது.

மேலும், “நீங்களும் உங்கள் மின்சாரத்துறையும்...ஏன் இந்துக்களையே துன்புறுத்துகிறீர்கள்? வர்த்தகர்களையும் இந்துக்களையும் வேண்டுமென்றே துன்புறுத்துகிறீர்கள்” என்றும் விஷம் கக்கியுள்ளார் அந்த எம்.எல்.ஏ..

இந்தப் போன்கால் ஜூன் 15ம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஏனெனில் மின்சாரத்துறை ரெய்டு நடத்தி மின் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து இவர் இவ்வாறு மிரட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை அம்பலாமான பின்பும், தான் உண்மையான பிரச்சினையைத்தான் எழுப்பியுள்ளேன் என்கிறாராம் சஞ்சய் குப்தா, எவ்வளவு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஒருதலைபட்சமாக நடக்கக் கூடாது என்றும், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், யாராக இருந்தாலும் ஒருதலைபட்சமாக நடக்கக் கூடாது அப்படி நீங்கள் நடந்து கொண்டால் எம் மக்கள் என்னை சும்மா விடுவார்களா?’ என்றும் கேட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

7 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்