காஷ்மீரை சூறையாடிவிட்டு வெளியேறுவதா? - பாஜகவுக்கு கேஜ்ரிவால் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

காஷ்மீரை சூறையாடிவிட்டு ,  கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் முதல்வர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணியில் கடும் மோதல் எழுந்த நிலையில், கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவதாக பாஜக இன்று அறிவித்தது. காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மக்களின் விருப்பத்திற்கு எதிராக காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் தற்போது காஷ்மீரை சூறையாடிவிட்டு, கூட்டணி அரசில் இருந்து வெளியேறியுள்ளது. பணமதிப்பு நீக்கத்தால், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாக பிரச்சாரம் செய்ததே? பிறகு ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள்’’ என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்