பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா ஸ்வராஜ் தெ.ஆப்பிரிக்கா பயணம்: ஐபிஎஸ்ஏ நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்

By செய்திப்பிரிவு

பிரிக்ஸ் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 5 நாள் பயணமாக நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தென்னாப்பிரிக்கா சென்றுள்ள அமைச்சர் சுஷ்மா, வரும் 4-ம் தேதி ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு சுஷ்மா தலைமை தாங்க உள்ளார். இதையடுத்து, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது நிறவெறி காரணமாக, ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் சுஷ்மா பங்கேற்க உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவம்தான் காந்தியின் சத்யாகிரக போராட்டத்துக்கு வித்திட்டது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

12 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்