காங். தலைமை ஐமுகூ ஆட்சியில் மல்லையா, வதேரா இருவருமே சட்டத்தை மீறி வளம்பெற்றவர்கள்தாம்: பாஜக கடும் தாக்கு

By பிடிஐ

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அனுப்பப்பட்ட வருமான வரி நோட்டீஸ் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாயைத்திறக்காதது ஏன்? என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தலைமறைவுத் தொழிலதிபர் விஜய் மல்லையா, ராபர்ட் வதேரா இருவருமே காங்கிரஸ் தலைமை ஐமுகூ ஆட்சியின் ஊழல் சின்னமாவார்கள். இப்போது சட்டத்தின் உஷ்ணத்தை எதிர்கொள்கிறார்கள்” என்றார் சம்பித் பாத்ரா.

2010-11 ஆம் ஆண்டுக்கான ரூ.25 கோடி வருமான வரி நிலுவைத்தொகையைச் செலுத்தக் கோரி வதேராவுக்கு அனுப்பப்பட்டது வருமான வரி தாக்கீது. வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துகான வரி நிலுவையாகும் இது. இப்போது சட்டம் ஊழல்வாதிகளைப் பிடித்து வருகிறது என்றார் பாத்ரா.

“ராகுல் காந்தி இப்போது பேச வேண்டியதுதானே, ஏன் வதேரா வருமானவரி நிலுவை நோட்டீசுக்கு வாய் திறவாமல் மவுனம் காக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார் பாத்ரா.

மேலும், “விஜய் மல்லையா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மகிழ்ச்சியாக வலம் வந்தார், இப்போது சோகமாக இருக்கிறார், இப்போது நீங்களே கூறுங்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரி ஏய்ப்பாளர்களை, கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை எப்படி அணுகியது, நாங்கள் எப்படி அணுகுகிறோம் என்று” எனத் தெரிவித்தார்.

மேலும் பாத்ரா கூறும்போது, 2013-ல் விஜய் மல்லையா ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதி கடன் பற்றி சில சாதகங்களையும் கேட்டதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

16 mins ago

கல்வி

26 mins ago

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

மேலும்