விமானப்படை போர்விமானம் விபத்து: அதிகாரி மரணம்

By பிடிஐ

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஜாம்நகர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படையின் ஜாக்குவார் செட் போர்விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் விமானத்தை ஓட்டிச்சென்ற மூத்த அதிகாரி உயிரிழந்தார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் லெப்.கலோ.மனீஷ் ஓஜா கூறியதாவது:

ஜாம் நகரிலிருந்து ஒரு வழக்கமான பயிற்சியை மேற்கொண்டபோது ஜாகுவார் விமானம் இன்று காலை 10.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது. ஜாகுவாரை ஓட்டிச்சென்ற விமானி ஏர் கமோண்டர் சஞ்சாய் சவுகான் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

இவ்விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளும்படி விமான தலைமையத்தின் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விமானம் தனது வழக்கமான திசையை நோக்கிச் செல்லும்போதுதான் பரேஜா கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இது குறித்து உள்ளூர்வாசிகள் தெரிவிக்கையில், ''விபத்துக்குள்ளான விமான பாகங்கள் சிதறி, நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த சில பசுக்கள் சிதறி விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவை உயிரிழந்தன. விமானத்தின் சிதறிய பாகங்கள் கிராமத்திற்கு வெளியே தொலைதூரத்தில் போய் விழுந்தன. உயிரிழந்த கால்நடைகளின் பாகங்கள் நிலத்தில் அங்கங்களே சிதறிக் கிடந்தன.'' என்று கூறினர்.

அந்த இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

விளையாட்டு

47 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்