‘செத்த மிருகத்தைப் போல் இழுத்து வந்தார்கள்’: உபி.யில் அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் சகோதரர் கண்ணீர்

By ஐஏஎன்எஸ்

கால்நடைகள் விற்பனையாளரான என் சகோதரரை பாஜக குண்டர்கள் அடித்து, உதைத்து, செத்தமிருகத்தை இழுத்து வந்ததைப் போல் இழுத்து வந்தனர் என்று உபியில் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டம், பில்குவா பகுதியில் உள்ள பஜேகுரா குர்து கிராமத்துக்குத் காசிம்(வயது45), அவரின் நண்பர்சமயுதீன் ஆகியோர் திங்கள்கிழமை கால்நடைகள் வாங்கச் சென்றனர். அப்போது காசிம்மையும், அவரின்நண்பரையும் பார்த்த அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் பசுமாட்டை வாங்கிக் கொல்வதற்குவந்திருக்கிறார்கள் எனத் தவறாக நினைத்து அடித்து, உதைத்து, சாலையில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதை ஒருதரப்பினர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இதைப் பார்த்த போலீஸார் அந்தகும்பலை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்தச் சம்பவம் குறித்தபுகைப்படம் வெளியானவுடன் உபிபோலீஸார் மன்னிப்பு கோரினார்கள்.

இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட காசிம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார், மற்றொருவர் சமயுதீன்தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காசிமின் சகோதரர் நேற்று முகம்மது நதீம் டெல்லியில் நிருபர்ளுக்கு பேட்டிஅளித்தார். இந்தச் சந்திப்பை மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்(ஏபிசிஆர்) ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது அவர் கூறியதாவது:

ஹபூரில் உள்ள பஜேகுரா குர்து கிராம மக்கள் நினைப்பதுபோல் என் சகோதரரும் அவரின் நண்பரும்இறைச்சிக்கடைக்காரர்கள் இல்லை. அவர்கள் கால்நடைகளை விலைக்கு வாங்கி சந்தையில் விற்பனைசெய்யும் தொழில் செய்து வந்தனர். ஆனால், இவர்களைப் பசுமாட்டை கொலை செய்பவர்கள் எனநினைத்த பாஜக குண்டர்கள், கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

செத்த மிருகத்தைச் சாலையில் இழுத்து வருவதைப் போல் என் சகோதரரை இழுத்து வந்தனர். நாங்கள்முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், என் சகோதரர் தரம்தாழ்ந்து நடத்தப்பட்டார். தண்ணீர்தாகத்தாலும், அடிபட்ட காயத்தாலும் என் சகோதரர் அழும்போது, யாரும் அவருக்கு உதவவில்லை. அந்தபாஜக குண்டர்கள் அவருக்குத் தண்ணீர் கொடுக்காமல், அவர் முஸ்லிம் என்று இறைச்சிக்கடைக்காரர்என்று கூறினார்கள். போலீஸார் கண்முன்னே செத்தமிருகத்தை போல் இழுத்துவரப்பட்டார்.

நான்கு நாட்களுக்கு முன் வீட்டை விட்டுபுறப்படும் போது, என் சகோதரர், கால்நடைகள்வாங்கப்போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், சென்றவர்தான் இன்றுவரைவீடுதிரும்பவில்லை , இனிமேல் திரும்பிவரப்போவதும் இல்லை. பிணமாகத்தான் வீட்டுக்கு அழைத்துவந்தோம்.

என் சகோதரரை ஒருகும்பல் அடித்துவிட்டார்கள், போலீஸ் நிலையம் வாருங்கள் என்று போலீஸார் எனக்குஅழைப்புச் செய்தபோதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. நான் போலீஸ் நிலையம் சென்றபோது, என்சகோதரரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகக் கூறினார்கள். ஆனால் மருத்துவமனைக்குச்சென்றால், உயிரிழந்து பிணமாகக் கிடத்தப்பட்டு இருந்தார்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட மற்றொருவரான சமயுதீன் குறித்து அவரின் சகோதரர் முகம்மதுமெகருதீன் கூறுகையில், என் சகோதரரை கும்பல் தாக்கிவிட்டார்கள் என்று அறிந்து போலீஸ் நிலையம்சென்றால் 6 மணிநேரம் எங்களைக் குழப்பிவிட்டார்கள். என் சகோதரரை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், கடைசியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என் சகோதரரைச்சந்தித்தேன். ஆனால், எங்களுக்குத் தெரியாமல் என் சகோதரரிடம் இருந்த கைவிரல் ரேகையை போலீஸார்பெற்றுச் சென்றுவிட்டனர். எதற்காக எனத் தெரியவில்லை எனத் தெரித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்