நாட்டின் வளர்ச்சி விகிதம் 9% தாண்டும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

By செய்திப்பிரிவு

மத்தியில் நிலையான அரசு அமைந்திருப்பதால் நாட்டின் வளர்ச்சி வகிதம் 9 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

பொருளாதார நிபுணர் ராஜீவ்குமார் எழுதிய Exploding Aspirations Unlocking India’s Future’ என்ற நூலை அருண் ஜேட்லி டெல்லியில் சனிக்கிழமை வெளியிட்டார்.

விழாவில் அவர் பேசும்போது, “மத்தியில் நிலையான, உறுதி யான முடிவுகளை எடுக்கும் அரசு அமைந்திருப்பதால் நாட்டின் வளர்ச்சி விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அளவான 8 - 9 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும்.

2008 சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு முன் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருந் துள்ளது. 2012-13, 2013-14 ஆகிய நிதியாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வகிதம் 5 சதவீதத் துக்கும் கீழே சரிந்தது.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. - பிடிஐ இந்தியாவில் பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அரசுக்குள்ளேயே பல சவால்களை சந்திக்க வேண் டியுள்ளது. தற்போது அரசுக்கு வலுவான ஆதரவு உள்ளது.

நாடாளுமன்ற நடைமுறைகளும் ஆதரவாக உள்ளன. அரசை எதிர்க்கும் சிலரால் தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க முடியவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

சுற்றுலா

5 mins ago

வணிகம்

5 hours ago

இந்தியா

30 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்