ராஜஸ்தானில் 2 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்தனர்: உலக சாதனையாக அங்கீகரித்தது கின்னஸ்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே இடத்தில் 2 லட்சம் பேர் யோகா பயிற்சி செய்தது உலக சாதனையாக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள ஆர்ஏசி மைதானத்தில் நேற்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு உலக சாதனை படைக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி, இந்நிகழ்ச்சியை கண்காணிப்பதற்காக கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் 2 பேர் லண்டனிலிருந்து வந்திருந்தனர். மாநில முதல்வர் வசுந்தரா ராஜே முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ஒரே இடத்தில் அதிகம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்தது. இதற்கான சான்றிதழை முதல்வர் வசுந்தரா ராஜே, மாவட்ட ஆட்சியர் கவுரவ் கோயல் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் கின்னஸ் அமைப்பின் அதிகாரிகள் வழங்கினர்.

இதுகுறித்து மாநில அரசின் உயர் அதிகாரி ஹரி ஓம் குர்ஜார் கூறும்போது, “காலை 5 மணி முதலே பொதுமக்கள் இங்கு குவியத் தொடங்கினர்.

இந்த மைதானத்தை கண்காணிக்கும் பணியில் ஆளில்லா விமானம் (டிரோன்) ஈடுபடுத்தப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பார்கோடு வழங்கப்பட்டது. இதன் உதவியுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை சுலபமாக எண்ணி விட்டோம். இந்த நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்றார். - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

46 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்