கிராம அஞ்சலக ஊழியர்கள் சம்பளம் உயர்வு

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்குப் பின் தொலைதொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கிராம அஞ்சலக ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.2,295 சம்பளம் பெறும் ஊழியர் ரூ.10 ஆயிரமும், ரூ.2,775 பெறும் ஊழியர் இனி மாதம் ரூ.12,500-ம் பெறுவார்கள். மாதம் ரூ.4,115 சம்பளம் பெறுவோருக்கு இனி ரூ.14,500 சம்பளம் வழங்கப் படும். இந்த ஊதியம் 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும். ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள 2.6 லட்சம் கிராம அஞ்சலக ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்