ரூ.1.70 கோடி லஞ்ச வழக்கு: வருமான வரி அதிகாரிகள் இருவருக்கு 5 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

ரூ.1.70 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், வருமானத் துறை அதிகாரிகள் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் தாணேவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று இயங்கி வரு கிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டு தானே வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு ரூ.25 கோடி அளவுக்கு வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக அதன் உரிமையாளரிடம் வருமான வரி கூடுதல் ஆணையர் சுமித்ரா பானர்ஜியும் (49), உதவி ஆணையர் அஞ்சலி பொம்பாலேவும் (50) தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வரி விதிப்பை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுமெனில், ரூ.2 கோடியை லஞ்சமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளனர். பின்னர், அந்தத் தொகையை ரூ.1.70 கோடியாக அவர்கள் குறைத்துக் கொண்டனர்.

இதுதொடர்பாக அந்தக் கட்டுமான நிறுவன உரிமையாளர், சிபிஐயிடம் புகார் அளித்தார். இதன்பேரில், மேற்குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகளும் லஞ்சம் வாங்கும்போது, சிபிஐ அதிகாரி கள் அவர்களை கையும் களவு மாக கைது செய்தனர்.

இவ்வழக்கின் இறுதி வாதங்கள் நேற்று நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சுமித்ரா பானர்ஜி மற்றும் அஞ்சலி பொம்பாலேவை குற்றவாளிகள் என மும்பை சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. பின்னர், அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்