பாஜக முன்னிலை; தேவகவுடா கட்சியுடன் கூட்டணிக்கே இடமில்லை: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேச்சு

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணிக்கே இடமில்லை என்று பாஜக கூறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட பதாமி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். அதேசமயம், மற்றொரு தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகத் தேர்தலில் பாஜகவின் பலம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நிருபர்களுக்கு பெங்களூரில் பேட்டி அளித்தார். அப்போது கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா, ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு கோருவீர்களா எனக் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், கர்நாடகத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி உறுதியாகி வருகிறது. தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 112 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். ஆதலால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணிக்கே இடமில்லை எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

12 mins ago

ஆன்மிகம்

22 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்