தேவகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: கர்நாடக அரசியல் பரபரப்புக்கிடையே தொலைபேசியில் பேச்சு

By செய்திப்பிரிவு

கர்நாடக அரசியலில் பாஜகவுக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் இடையே தற்போது கடும் மோதல் நடந்து வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, பிரதமர் மோடி இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாஜகவின் எடியூரப்பாவை மாநில முதல்வராக ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவியேற்கச் செய்துள்ளார். இதை எதரித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனால் பாஜகவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியலில் சூழலில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேவகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, அதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடனும் வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்’’ எனக்கூறியுள்ளார்.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

ஹைதராபாத்திற்கு மாறிய கர்நாடக அரசியல்: 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம் - கட்சி மாறத் திட்டம்?

சித்தராமையாவை வீழ்த்திய மோடி – அமித்ஷா அஸ்திரங்கள்!

ரஜினி அரசியலின் பேராபத்து

“நான் நடிகன் கிடையாது; எனக்கு நடிக்கத் தெரியாது” - விஜய் ஆண்டனி விறுவிறு பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்