மோடி அரசு 4 ஆண்டு நிறைவு: ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு விமர்சித்த ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

 பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,அவரின் ஆட்சி குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டணியின் பிரதமராக மோடி, கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவி ஏற்றார். மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த 4 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பாஜக பெருமையாகப் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு விமர்சித்துள்ளார்

மோடியின் ஆட்சியில் முக்கிய 4 துறைகளான வேளாண்மை, வெளியுறவுத்துறை, பெட்ரோல் டீசல் விலை, வேலைவாய்ப்பு, ஆகியவற்றில் தோல்வி அடைந்துவிட்டது(எப்) என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தத் துறைகளில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தாத காரணத்தால், தோல்வி அடைந்துவிட்டது என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், ஆட்சியைக் குறித்தும், தனது சுயபெருமை குறித்து மக்களிடம் பேசுவதிலும், ஆட்சியை விளம்பரப்படுத்தி கவர்ச்சிகரமாக ஸ்லோகன் உருவாக்குவதால் ஆகியவற்றுக்கு ஏபிளஸ் மதிப்பும் (முதலிடம்) ராகுல் அளித்துள்ளார்.

ஆனால், சர்வதேச அளவில் உயர்த்திப் பேசப்பட்ட யோகாவுக்கு பி மைனஸ் கிரேடும் வழங்கியுள்ளார். அதாவது தொடக்கத்தில் யோகாவை முன்னெடுக்க முயற்சித்த பாஜக அரசு, பின்னாளில் அதில் கவனம் செலுத்தாமல் பி மைனஸ்அளவுக்கு சென்றுள்ளது.

இதை ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்