திடீர் திருப்பம்: பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு

By பிடிஐ

 

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முதல்நாள் எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப்கள் போலியானது என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வாஜுபாய் வாலா.

இதை எதிர்த்து காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதாதளம்கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பாவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது.

எடியூரப்பா தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க 7 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சி 3 ஆடியோ டேப்களை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிட்டது.

அதில் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எடியூரப்பா மகன் விஜேயந்திரா, அவருக்கு நெருக்கமான புட்டுசாமி ஆகியோர் பேரம் பேசியதாக கூறப்பட்டது.

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் ஹெப்பருக்கு ரூ.15 கோடியும், அமைச்சர் பதவியும், சுரங்க ஊழல் வழக்குகளில் இருந்து விடுவித்து விடுவதாகவும் அந்த ஆடியோ டேப்பில் பாஜக தலைவர்கள் பேசியதாக இருந்தது.

இந்த ஆடியோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தநாள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், காங்கிகரஸ் கட்சி தன்னை பற்றி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது எனத் தெரிவித்துள்ளார். அதில்அவர் கூறியிருப்பதாவது :

தன்னையும், தனது மனைவியையும் பாஜகவினர் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்மனைவியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பாஜகவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது.

அதுபோன்ற எந்தவிதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ளவில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இதுபோன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

35 mins ago

சுற்றுலா

47 mins ago

கல்வி

4 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்