ஆர்எஸ்எஸ் நடத்தும் விழாவில் பங்கேற்க கூடாது: பிரணாபுக்கு ஜாபர் ஷெரீப் கடிதம்

By செய்திப்பிரிவு

ஆர்எஸ்எஸ் நடத்தும் விழாவில் பங்கேற்கக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாபர் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார்.

ஆர்எஸ்எஸ் சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ம் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு ஜாபர் ஷெரீப் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஆர்எஸ்எஸ் விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. மதச்சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்த நீங்கள், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் விழாவி்ல் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘‘குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’’ என்று பிரதமர் மோடிக்கு 2017 ஏப்ரலில் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

ஆன்மிகம்

19 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்