தெற்கு டெல்லியில் காஷ்மீரிகளுக்கு சரமாரி அடி உதை: காலனிவாசிகள் மீது புகார்

By செய்திப்பிரிவு

காஷ்மீரிப் பெண்கள் 3 பேர், ஒரு ஆண் ஆகியோரை தென் கிழக்கு டெல்லியில் உள்ள சன் லைட் காலனி வாசிகள் கடந்த இரவு ஹாக்கி ஸ்டிக் உள்ளிட்டவைகளால் கடுமையாகத் தாக்கியது பரபரப்பாகியுள்ளது.

இவர்களைக் காப்பாற்றாமல் அனைவரும் காஷ்மீரி என்பதாலேயே கடுமையான வார்த்தைகளால் அவர்கள் மீது வசைமாரி பொழிந்துள்ளனர்.

இதனையடுத்து காஷ்மீரிகள் போலீஸில் அளித்த புகாரில், ‘சில மாதங்களுக்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள், காஷ்மீரி தீவிரவாதிகள் என்று எங்களை வசைமாரி பொழிந்தனர். மேலும் எங்களை அந்தப் பகுதியிலிருந்து காலி செய்து கொண்டு போகுமாறும் மிரட்டினார்கள்’ என்று தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் 40 பேர் இந்த நால்வரையும் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

ஆனால் போலீஸ் அதிகாரி கூறும்போது, “இருதரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன. விசாரித்து வருகிறோம்” என்றார் சின்மய் போஸ்வால் என்ற அந்த போலீஸ் அதிகாரி.

பாதிக்கப்பட்ட காஷ்மீரி பெண் ஒருவர் கூறும்போது, “என்னுடைய சகோதரிகளை தாறுமாறாகத் திட்டி அடித்து உதைத்தனர். என்னுடைய இடது கை உடைந்தது. எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளியையும் தாக்கினர். இது திட்டமிடப்பட்ட தாக்குதல், அவர்கள் ஹாக்கி ஸ்டிக்குகளை வைத்திருந்தனர்” என்றார்.

மற்றொரு நபர் கூறும்போது, காஷ்மீரிகளில் ஒருவர் பெண் ஒருவருடன் மோசமாக நடந்து கொண்டார் அதனால்தான் தாக்கப்பட்டனர் என்றார்.

அப்பகுதியில் வசிக்கும் சங்கீதா திரிபாதி என்பவர் தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் கூறும்போது, “அந்தக் காஷ்மீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இதே பகுதியில் பெண் ஒருவருடன் மோசமாக நடந்து கொண்டார். டிசம்பரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்காக நான் அவர் மீது புகார் அளித்திருந்தேன். கடந்த இரவில் கூட அவர்கள் என்னை கடுமையாக வசைபாடி மோசமாக நடந்து கொண்டனர்” என்றார்.

சரி எதற்கு ஹாக்கி குச்சிகள் என்றதற்கு இதே சங்கீதா திரிபாதி, ‘நாய்கள் தொல்லை காரணமாக’ என்றார்.

தாக்கப்பட்ட பெண் தன்னைத்தானே அடித்துக் கொண்டு காயப்படுத்திக் கொண்டார், நான் அவரிடமிருந்து ஹாக்கி குச்சியைப் பிடிங்கினேன் என்கிறார் சங்கீதா திரிபாதி.

பரபரப்பு ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் போலீசார் விசாரணை முடிந்த பிறகே உண்மை நிலவரம தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்