தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை: உச்ச நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

தாஜ்மகாலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தொல்பொருள் துறை தவறிவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சரியான பாராமரிப்பு இல்லாததால் தாஜ்மகாலின் நிறம் மாறி வருகிறது. பூச்சிகள் தொல்லையால் பாதிப்புள்ளது. எனவே தாஜ்மகாலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சூழலியலாளர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தாஜ்மகாலை பாதுகாக்க சர்வதேச நிபுணர்களை நியமிப்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி தெரிவித்தார். யமுனை நதியில் நீர் தேங்குவதால் பூச்சிகள் தொல்லை இருப்பதாக தொல்பொருள் துறை வழக்கறிஞர் கூறினார். அப்போது, ‘‘தொல்பொருள் துறை தனது வேலையை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. தாஜ்மகாலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொல்பொருள் துறை தவறிவிட்டது. தொல்பொருள் துறை தேவையா, இல்லையா என்று மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

14 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்