‘ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ்’- ராகுல் மீது அமித் ஷா காட்டம்

By செய்திப்பிரிவு

கர்நாடகத்தில் தேர்தல் முடிவு வந்தவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக பாஜக104 இடங்கள் பெற்று உருவானது. அதேசமயம், ஆளும் காங்கிரஸ் 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கோரியது.

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இந்தச் சூழலில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுவாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். ஆளுநர் மாளிகையில், இன்று காலை எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார்.

இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள விதான் சவுதா அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ராகுல் காந்திக்கு பதிலடி தரும் வகையில் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

''கர்நாடகத்தில் தேர்தல் முடிவு வெளியானவுடன், மாநிலத்தின் நலனைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் கவலைப்படாமல், சிறுமையான அரசியல் ஆதாயத்துக்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டது. இது மிகவும் வெட்கப்பட வேண்டியதாகும்.

104 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் அளித்த தீர்ப்பு இதுதான்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ 78 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது, முதல்வரும், பல அமைச்சர்களும் தோல்வி அடைந்துள்ளனர். அதேபோல மதச்சார்பற்ற ஜனதா களம் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்று, பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. மக்கள் நல்ல சிந்தனை உள்ளவர்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அவரின் கட்சி வரலாறு உண்மையில் நினைவிருக்காது என எண்ணுகிறேன். நாட்டில் அவரச நிலை கொண்டுவரப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான், அரசியலமைப்புச்சட்டத்தில் 356-ம் பிரிவைத் தவறாகப் பயன்படுத்தியதும் காங்கிரஸ் கட்சிதான், நீதித்துறையின் நம்பகத்தன்மையை அழித்ததும் காங்கிரஸ்தான், ஊடகங்கள், சமூக அமைப்புகளையும் கட்டுக்குள் வைத்திருந்ததும் காங்கிரஸ்தான். இவையெல்லாம் ராகுல் காந்திக்கு நினைவிருக்கிறதா?''

இவ்வாறு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதைப்படிக்க மறந்துடாதீங்க..

‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை

1996-ல் தேவகவுடா ஆட்சியில் குஜராத் பாஜக ஆட்சிக் கலைப்பு: 22 ஆண்டுக்குப் பிறகு விதி விளையாடியது

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்