உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் இன்றுடன் ஓய்வு: கடைசி நாளில் தலைமை நீதிபதி அமர்வில் பணி

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செலமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். தனது கடைசி நாளான இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் தலைமையிலான அமர்வில் பணியாற்றுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன்பி லோக்கூர், குரியன் பி ஜோஸப் உள்ளிட்ட 4 நீதிபதிகள் போர்க்கொடி எழுப்பி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக நீதிபதிகள் 4 பேரும் குற்றம் சாட்டினார்கள்.

இதையடுத்து, தீபக்மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் செலமேஸ்வர் தலைமை நீதிபதி அமர்வில் இடம் பெறுவதை தவிர்த்து வேறு அமர்வில் பணியாற்றி வந்தார்.

மூத்த நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜுன் மாதம் 22-ம் தேதிதான் ஓய்வு பெற உள்ளார். ஆனால், நீதிமன்றத்தின் கோடைவிடுமுறை தொடங்கிமுடிய ஜூன்மாதம் ஆகும் என்பதால், இன்றைய பணிதான் செலமேஸ்வருக்கு கடைசியாகும்.

செலமேஸ்வர் ஓய்வு பெறும்நாளில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அழைப்புவிடுத்து இருந்தது. ஆனால், அந்த அழைப்பை செலமேஸ்வர் ஏற்க தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்துவிட்டார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன், நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலிஜியம் முறைக்கு எதிராக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுக்கு வந்தபோது, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் செலமேஸ்வர் மட்டும் கடுமையாக எதிர்த்தார்.

நீதிபதிகளை நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் முறைதான் தொடர்ந்து இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார், மத்தியஅரசு தேர்வு செய்வது என்பது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானது என்று தெரிவித்தார் என்று குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அதைக்கண்டித்த செலமேஸ்வர், மத்தியஅ ரசுக்கு கடிதம் எழுதி, ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்படிக்க மறந்துடாதீங்க...

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மோடியின் நெருங்கிய நண்பர் வஜுபாய் வாலா?

குட்கா வழக்கு- அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ்

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்