எங்கள் சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் மோடி: ‘வறுத்தெடுத்த’ ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்

By செய்திப்பிரிவு

விராட் கோலியின் உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, எங்களின் சவாலையும் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தனது உடற்தகுதியை நிருபிக்கும் வகையில், உடற்பயிற்சி செய்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். இதேபோல் விராட் கோலி, சாய்னா நேவால், சல்மான்கான் ஆகியோரும் உடற்தகுதியை நிரூபிக்க முடியுமா எனச் சவால் விடுத்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த விராட் கோலி, தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி உடற்தகுதியை நிரூபிக்க முடியுமா? எனச் சவால் விடுத்து இருந்தார். விராட் கோலியின் சவாலை ஏற்பதாகக் கூறி பிரதமர் மோடியும் ட்வீட் செய்து இருந்தார்.

பிரதமர் மோடியின் ட்வீட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவும் தங்களுடைய சவாலை மோடி ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், தெரிவித்து இருப்பதாவது:

அன்புள்ள பிரதமரே, விராட் கோலியின் உடற்தகுதி சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டதைப் பார்த்தேன். என்னிடமும் ஒரு சவால் இருக்கிறது. இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்

லாலுவின் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

விராட் கோலியிடம் இருந்து வந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் விடுக்கும் சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கேட்கிறோம். வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்குக வேலை கொடுங்கள், விவசாயிகள் கடன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், தலித்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறையை ஒடுக்க வேண்டும், இந்தச் சவால்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்களா? மோடி சார்.

இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்