‘‘காவிரி தண்ணீர் கேட்கும் முன் கர்நாடக அணைகளை வந்து பாருங்கள்’’ - நடிகர் ரஜினிக்கு குமாரசாமி பதில்

By செய்திப்பிரிவு

காவிரியில் தண்ணீர் திறக்ககோரும் நடிகர் ரஜினி காந்த், கர்நாடகா வந்து அணைகளை பார்வையிட்டால், எங்கள் நிலைமையை புரிந்து கொள்வார் என கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, தனது சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள கோயில்களில் அவர் இன்று வழிபாடு நடத்தி வருகிறார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி காந்த் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘‘காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது, புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி அதை நிறைவேற்ற வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு குமாரசாமி பதிலளித்ததாவது:

‘‘காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன்பாக, நடிகர் ரஜினி காந்த் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நிலைமையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்வார்’’ எனக்கூறினார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: செவலியர் உட்பட 16 பேர் பலி?

நியூயார்க் போலீஸில் இணைந்த முதல் சீக்கிய பெண்: மதச் சின்னமான டர்பன் அணிந்து கொள்ள அனுமதி

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

58 mins ago

க்ரைம்

52 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

27 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்