‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

By பிடிஐ

 ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்து ஜனநாயகக்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.

இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராக பதவி ஏற்றார். இது குறிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''கர்நாடகத்தில் உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கிடையாது. ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜக அதிகாரத்தை நேர்மைக்கு விரோதமாக பயன்படுத்தி, ஆட்சி அமைத்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் நிகழ்வாகும். இந்த போலித்தனமான வெற்றியை பாஜக தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு தேசமே துயரப்பட வேண்டும்.''

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதைப்படிக்க மறந்துவிடாதீர்கள்...

ராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்

சூடேறும் கர்நாடக அரசியல் களம்

‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

14 mins ago

கல்வி

7 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

10 mins ago

ஓடிடி களம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்