ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை முடுக்கிவிடுங்கள்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ரேபிஸ் நோயை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டபிள்யூஎச்ஓ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உலகம் முழுவதும் ரேபிஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 59 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அதாவது 9 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழக்கிறார். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் ஏழைகள். அதிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரேபிஸ் பாதிப்பு (15 லட்சம்) அதிக அளவில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள 11-ல் 8 நாடுகள், சர்வதேச அளவிலான மொத்த உயிரிழப்பில் 45 சதவீத (26,000) பங்கு வகிக்கின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டபிள்யூஎச்ஓ பிராந்திய (தென்கிழக்கு ஆசியா) இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, “மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய்கள் மூலமே ரேபிஸ் பரவுகிறது. எனவே, இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடுக்கிவிட வேண்டும்” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

1 min ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்