ரபேல் போர் விமான ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

By ஐஏஎன்எஸ்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கிப் பேசியுள்ளார்.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மிக அதிகமான விலையில் போர் விமானங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு பாஜக அரசு மீது எழுந்துள்ளது.

இந்த நிலையில் மேலும் 114 போர் விமானங்களை வாங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கும் பலத்த எதிர்ப்பு தற்போது தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ராகுல் ட்விட்டரில் நேற்று கூறும்போது, “ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான போர் விமான ஒப்பந்தம் செய்வதற்காக மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நண்பர்கள், இந்த ஒப்பந்தத்தில் இணையத் துடித்து வருகிறார்கள். ஏற்கெனவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ரூ.40 ஆயிரம் கோடி அரசு கஜானா பணம் பிரான்ஸுக்கு போய்விட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தனது நண்பர்களுக்கு உதவ மறு டெண்டர் விட்டுள்ளார்” என்று ராகுல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்