கதுவா, உன்னாவோ எதிர்ப்பு: டெல்லியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

By பிடிஐ

கத்துவா, உன்னாவோ பகுதிகளில் நடந்த பாலியல் பலாத்ககார கொலை சம்பவங்களை எதிர்த்து டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

நேற்று மாலை, டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆல் இந்தியா ஸ்டூடண்ட்ஸ் அசோஸியேஷன் (ஏஐஎஸ்ஏ) கத்துவா மற்றும் உன்னாவோ பாலியல் வன்முறைக்கு நீதிகேட்டு இந்த  ஊர்வலத்தை நடத்தியது.

இதுகுறித்து ஏஐஎஸ்ஏ மாணவர் அமைப்பின் தலைவர் கவால்ப்ரீத் கவுர் தெரிவிக்கையில்,

''குழந்தைகளும் இளம்பெண்களும் பாதிக்கப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகளை ஆதரிக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தது. இதற்காக இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது ஒட்டு மொத்த பாஜக இயந்திரமே பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வகுப்பு வாதப் பார்வையில் அணுகுவதையே காட்டுகிறது. இதன்மூலம் குற்றவாளிகளைப் பாதுகாப்பது வெட்கக் கேடானது. கத்துவா வழக்கு ஸ்ரீநகர் அல்லது புதுடெல்லிக்கு மாற்றப்பட வேண்டும்'' என்றார்.

அனைத்துக் குற்றவாளிகளையும் உடனே கைது செய்யும்படியும் குற்றவாளிகளை பாதுகாக்க முயலும் பாஜக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கும்படியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

கல்வி

2 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

4 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

35 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்