பாலியல் பலாத்கார புகார்: சாமியார் ஆசாராம் மீதான வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சாமியார் ஆசராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த 2012-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை சாமியார் ஆசாராம் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 2013 ஆகஸ்ட் 3-ல் அவர் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜோத்பூர் சிறப்பு எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி மது சூதன் சர்மா வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கின் இறுதி விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதில் ஆசாராம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த அக்காள், தங்கை சாமியார் ஆசாராம் மீதும் அவரின் மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்கார புகார் கூறியுள்ளனர். இந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்