ஏழுமலையான் உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு பழைய 2,000 நோட்டுகள் காணிக்கை

By என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

இதனிடையே 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசுஅறிவித்தது. எனினும், ஏழுமலையான் கோயில் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர். கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி வரை ரூ.3.20 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.

அவற்றை மாற்ற அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதிகோரியது. இதற்கு 5 தவணையாக மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி ரூ. 3.20கோடியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

இதேபோல் பழைய 1000 மற்றும் 500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன. ரூ. 500கோடி வரை செலுத்தப்பட்ட பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ள வில்லை. ஆதலால் அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்