சுதாகரன் திருமணத்துக்கு ஜெயலலிதா ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை: பெங்களூர் நீதிமன்றத்தில் 7-ம் நாளாக வாதம்

By செய்திப்பிரிவு

சுதாகரன் திருமணத்துக்காக ஜெயலலிதா ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று சுதாகரன் மற்றும் இளவரசியின் வழக்கறிஞர் அமித் தேசாய் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சுதாகரன் மற்றும் இளவரசி யின் சார்பில் மும்பையைச் சேர்ந்த‌ வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜர் ஆனார். அவர் 7-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது:

இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசியின் 16 அசையா சொத்துக்களை இணைத்துள்ளனர். அந்த சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் ரூ.26 கோடி மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

அதேபோல சுதாகரன் சென்னையில் மஹா சுப்புலட்சுமி திருமண மண்ட பத்தை ரூ.38 லட்ச ரூபாய்க்கு வாங்கி னார். இதில் ரூ.10 லட்சம் கனரா வங்கி யில் கடனாக பெற்றுள்ளார். ஆனால் போலீஸார் இதனைக் கருத்தில் கொள் ளாமல், ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் ரூ.5.4கோடிக்கு வாங்கி யதாக மிகைப்படுத்திக் காட்டியுள்ளனர்.

மேலும் இளவரசியின் கணவர் ஜெய ராமன் தமிழக அரசு ஊழியர். இவர் தனது பணிக் காலத்தில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதற்காக தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப் பீடாக வழங்கியது. இந்தப் பணம் இளவரசியின் மகன் விவேக் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் இழப்பீடாக பெற்ற அந்த பணமும் இளவரசியின் சொத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட் டுள்ளவர்களை எவ்வளவு கொடூரமாக அணுகியுள்ளது என்பது புரியும். இதேபோல தேவையில்லாத அனைத்தையும் பல்வேறு நோக்கங்க ளுக்காக வழக்கில் இணைத்துள்ளனர்.

சிவாஜி குடும்பமே

சுதாகரன் திருமணத்துக்காக, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆடம்பரமாக திருமணம் செய்தார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சுதாகரனின் திருமணத்துக்கு ஜெய லலிதா ஒரு ரூபாய் கூட செலவழிக் கவில்லை.

சுதாகரனின் மனைவி, நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அனைத்து செலவுக ளையும் அவர்கள் குடும்பமே ஏற்றுக் கொண்டது. பிரபல நடிகர் என்பதால் சிவாஜி கணேசன், தங்களது இல்ல திருமணத்தை மிகுந்த ஆடம்பரமாக செய்தார். இதனை தமிழக லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் ஜெயலலிதா செலவு செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர் என்று வாதாடினார்.

மேலும், “எங்களுடைய தரப்பு இறுதி வாதம் இன்னும் முடிவடைய வில்லை. வரும் திங்கள்கிழமை வரை எனக்கு மும்பை நீதிமன் றத்தில் நிறைய பணிகள் இருப்பதால் வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை , நீதிபதி டி'குன்ஹா செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்