ஜம்மு - காஷ்மீரில் பாஜக துணை முதல்வர் திடீர் மாற்றம்: கதுவா சம்பவம் எதிரொலி?

By செய்திப்பிரிவு

 ஜம்மு - காஷ்மீரில் துணை முதல்வராக பதவி வகித்து வந்த நிர்மல் குமார் விலகியுள்ள நிலையில் சபாநாயகர் கவிந்தர் குப்தா  அந்த பதவியை ஏற்கிறார். மாநில அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படுகிறது.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மெகபூபா முப்தி முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் கதுவாவை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பாஜகவை அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர்களை ராஜினாமா செய்ய பாஜக மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அமைச்சரவையை மாற்றியமைக்கும் பொருட்டு மேலும் சில பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் நேற்று மாலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வராக கவிந்தர் குப்தா பதவியேற்க ஏதுவாக அவர், ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின. புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா பதவியேற்கிறார்.

அதேபோல், முகம்மது கலி பந்த், சட் பால் ஷர்மா, முகம்மது அஷ்ரப் மிர், சுனில் குமார் ஷர்மா, ராஜீவ் ஜஸ்ரோடியா, தேவிந்தர் குமார் மன்யால், மற்றும் ஷக்தி ராஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதேபோல் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்