சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: டெல்லி அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை

By செய்திப்பிரிவு

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி அமைச்சரும், ஆத் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு அடிப்படையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2015-16-ம் நிதியாண்டில் ரூ.4.63 கோடி தொகை சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐ அளித்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும்தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் நேற்று அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரயாஸ், அகிசந்த் டெவலப்பர்ஸ், மங்கள்யத்தன் நிறுவனம் ஆகியவற்றில் ஜெயினுக்கும், அவரது மனைவிக்கு மூன்றில் ஒரு பகுதி பங்குகள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.- ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்