யு.பி.எஸ்.சி. விவகாரம்: சபாநாயகர் முன்பு செய்தித்தாளை கிழித்து வீசி எம்.பி. ஆவேசம்

By செய்திப்பிரிவு

மக்களவையில் யு.பி.எஸ்.சி தேர்வு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்ப வாய்ப்பு அளிக்கப்படாததால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்பு செய்தித்தாள் ஒன்றை ஆர்.ஜெ.டி எம்.பி. பப்பு யாதவ் கிழித்தெறிந்தார்.

யு.பி.எஸ்.சி தேர்வில் மாற்றம் கொண்டுவர கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை அதிகாரிகள் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆர்.ஜெ.டி. எம்.பி. பப்பு யாதவ் வலிறுத்தினார்.

இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் பேச அனுமதி அளிக்க முடியாது என்று அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

இதனை அடுத்து ஆவேசமடைந்த எம்.பி. பப்பு யாதவ், சபாநாயகர் முன்பு சென்று, மாணவர்கள் போராட்டம் குறித்த செய்திகள் இடம்பெற்ற செயதித்தாளை கிழித்து வீசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, அவையின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு, ஆர்.ஜெ.டி எம்.பி.பப்பு யாதவ், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்