cVIGIL | நாடு முழுவதும் சி-விஜில் செயலியில் இதுவரை 79,000+ விதிமீறல் புகார்கள் பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 58,500 புகார்கள் (மொத்த புகார்களில் 73 சதவீதம்) சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் பேனர்களைப் பற்றியது. 1,400 புகார்கள் பணம், பரிசு பொருள்கள் மற்றும் மதுபானம் விநியோகம் குறித்தவை.

சுமார் 3 சதவீத புகார்கள் (2,454) சொத்துக்களைச் சேதப்படுத்துவது தொடர்பானவை. 1,000 புகார்கள் தடைசெய்யப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்தது தொடர்பாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தியது தொடர்பாக பதிவாகியுள்ளன. துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வந்த 535 புகார்களில் அவை அனைத்தும் தீர்த்துவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பின்போது, எந்த ஒரு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க சி-விஜில் செயலியைப் பயன்படுத்தும்படி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தியிருந்ததை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

41 mins ago

தொழில்நுட்பம்

46 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்