ரிலையன்ஸ்- பாஜக ஊழல் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: ஆம் ஆத்மி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ஊழல் தொடர்பை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

“இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.54,000 கோடி ஆதாயம் கிடைத் துள்ளது, அதே அளவு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றபோது இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் (ஏ.சி.பி.) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவின் வரம்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அதன்படி டெல்லி மாநில நிர்வாகத்துக்கு உள்பட்ட ஊழல் விவகாரங்களை மட்டுமே ஏ.சி.பி. விசாரிக்க முடியும்.

இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது. அதன் காரணமாகத்தான் ஏசிபி-யின் அதிகார வரம்பை மத்திய அரசு முடக்கியுள்ளது.

ரிலையன்ஸுக்கும் பாஜக வுக்கும் உள்ள நேரடி தொடர்பை ஆம் ஆத்மி விரை வில் அம்பலப்படுத்தும். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத் தில் சட்டரீதியான நடவடிக்கை களும் எடுக்கப்படும்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஊழலை ஒழிப்போம் என்று பாஜக கோஷமிட்டது. ஆனால் இப்போது ஊழலுடன் அந்தக் கட்சி சமரசம் செய்து கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

30 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்