ராஜஸ்தானில் இடைத்தேர்தல் தோல்வி: வசுந்தரா ராஜே பதவி விலக மாநில பாஜக போர்க்கொடி

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக வலியுறுத்தி பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கட்சியின் மாநில தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி இரண்டு மக்களவை தொகுதிகளுக்கும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவினர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பு மணி என்று கூறிய முதல்வர் வசுந்தரா ராஜே, அரசின் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் விளக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்து வரும் நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமானால், முதல்வர் பதவியில் இருந்து வசுந்தரா ராஜே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவுக்கு கட்சியின் மாநில தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். வசுந்தரா ராஜேவுக்கு எதிராக மாநில பாஜக தலைவர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 secs ago

வணிகம்

12 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

22 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

மேலும்