பிறந்து 28 நாட்களுக்குள் இந்தியாவில் 6 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழப்பு- யுனிசெப் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் 184 நாடுகளில் குழந்தைகள் இறப்பு குறித்து யுனிசெப் அமைப்பின் ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் குழந்தைகள் (5 வயதுக்கு உள்பட்ட) இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில், உலக அளவில் இந்தியா 31-வது இடத்தில் இருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்