வெளிநாடு பயணம் மேற்கொள்வதால் மாலத்தீவு சிறப்பு தூதரை சந்திக்க மோடி மறுப்பு

By செய்திப்பிரிவு

கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், தனது நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து எடுத்துரைக்க சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தனது சிறப்பு தூதரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்பவில்லை. இதுகுறித்து இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறும்போது, “மாலத்தீவு பிரச்சினை குறித்து எடுத்துரைப்பதற்காக, சிறப்புத் தூதரை முதலில் இந்தியாவுக்கு அனுப்ப அதிபர் திட்டமிட்டிருந்தார். ஆனால்,வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாடு சென்றிருப்பதையும் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதையும் அறிந்தோம்” என்றார்.

மாலத்தீவு அதிபரின் தூதர் இன்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி ஜோர்டான், பாலஸ்தீனம், யுஏஇ,ஓமன் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இதனால் தூதரை சந்திக்க வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சிறப்புத் தூதரை சந்திக்க மோடி தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்