ராமர் கோயில் போல அயோத்தி ரயில் நிலையம்: மத்திய அமைச்சர் சின்ஹா தகவல்

By செய்திப்பிரிவு

அயோத்தியில் உள்ள ரயில் நிலையத்தை ராமர் கோயிலைப் போல மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி நகரில் ரூ.200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயோத்தி நகரில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அயோத்தி ரயில் நிலையம் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். இந்த ரயில் நிலையத்தை ராமர் கோயிலைப் போல கட்ட திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான திட்டத்தை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்காக ரயில்வே அமைச்சகம் அனுப்பி வைக்கும்.

ராம பக்தர்கள் அயோத்திக்கு வந்து செல்ல வசதியாக, முக்கிய நகரங்களுடன் ரயில் இணைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தி ரயில் நிலையம் அனைத்து நவீன வசதிகளைக் கொண்டதாக மாற்றி அமைக்கப்படும்.

இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். மேலும் பைசாபாத் - பாரபங்கி வழித்தடத்தை இருவழிப்பாதை யாக மாற்றவும் மின்மயமாக்கவும் ரூ.1,116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2022-ல் முடிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

28 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்