ஹஜ் யாத்திரிகர்களுக்கு உதவ தனி முஸ்லிம் அமைப்பு உருவாக்க கோரி வழக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. அதை சமீபத்தில் ரத்து செய்தது. அதற்குப் பதில் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் ஹஜ் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ஷாகித் அலி என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. அப்படி இருக்கும்போது ஹஜ் புனித யாத்திரை விஷயத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் ஹஜ் கமிட்டி சட்டம் 2002-ஐயும் நீக்கிவிடலாம். ஹஜ் யாத்திரை விவகாரத்தைக் கவனிக்க இந்திய முஸ்லிம்கள் தனி அமைப்பை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங் கிய அமர்வு நேற்று விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ‘‘மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு, அமைச்சகங்கள் விரைந்து ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை மனுதாரருக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மேலும் மனுவை தள்ளுபடி செய்தனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்