‘‘அதிக பொருட்செலவாகும் அனல் மின்சார தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?’’ - தமிழக மின் உற்பத்தித் திறனை விமர்சிக்கும் ஆய்வு

By ஐஏஎன்எஸ்

 

தமிழகத்தில் குறைந்த செலவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், மின்சார வாரியம் அனல் மின்சார தயாரிப்பில் ஆர்வம் காட்டுவதால் பயனில்லாமல் போவதுடன், பெரும் நஷ்டமும் ஏற்படக்கூடும் என மின்சார பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

‘‘இந்தியாவில் மின்சார மாற்றம்: தமிழ்நாடு ஒரு ஆய்வு’’ என்ற தலைப்பில் மின்சார பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:

‘‘தமிழக அரசு தொடர்ந்து மிக அதிகமான பொருட்செலவு கொண்ட நிலக்கரி மின்சாரத்திலேயே முழு கவனமும் செலுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே, தமிழகத்தின் மின்சார தயாரிப்பு மற்றும் உபயோகம் லாபகரமாக இல்லை. குறிப்பாக 22,500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்த அதிகஅளவு நிதி தேவைப்படும்.

அனல் மின்சாரம்

இதுமட்டுமின்றி தற்போது தேவைப்படும் நிலக்கரியை போல இரண்டு மடங்கிற்கும் அதிகமாக நிலக்கரி தேவை உயரும். தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்களுக்கே போதுமான தரமான நிலக்கரி கிடைப்பதில்லை. ஆனால், 62 சதவீதம் அளவிற்கு காலதாமதமாகவே அந்த அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி கிடைக்கின்றன.

இதுமட்டுமின்றி நிதிநிலை அடிப்படையில் பார்ததாலும், அனல் மின்நிலைய திட்டங்கள் கட்டுப்படியானதாக இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவு மிக அதிகமாக உள்ளது. சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சார தயாரிப்பில் போதுமான முதலீடுகள் வந்து கொண்டுள்ள நிலையிலும், அனல் மின்சார தயாரிப்பில் தமிழகம் ஆர்வம் காட்டுவது வியப்பை அளிக்கிறது.

போதுமான நிதி இல்லாமலும், முறையான திட்டமிடல் இல்லாமலும், தமிழகத்தில் பல மின் திட்டங்கள் உரியமுறையில் செயல்படாமல் உள்ளன. 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத்தக்க, செய்யூர் அனல் மின்நிலைய திட்டங்கள் போதுமான நிதி ஆதாரம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே தமிழக மின்சார வாரியம், அனல் மின்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பலதுறை சார்ந்த மின்சார தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே தமிழகத்திற்கு நீண்ட காலததிற்கு பலன் அளிக்கும்.

காற்றாலை மின்சாரம்

தமிழக அரசு குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க காற்றாலை மின்சாரத்தை இரண்டு மடங்கும், சூரிய ஒளி மின்சாரத்தை ஆறு மடங்கும் அதிகரிக்க முடியும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி உரிய முறையில் நடந்து வருகிறது. இதுபோலவே சூரிய ஒளி மின்சார உற்பத்தியும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற மிக குறைந்த செலவில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக மின்சார வாரியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் மின்சார தேவை 80 சதவீத அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்ற சூழலில் குறைந்த செலவிலான மின்சாரம் மிகவும் கைகொடுக்கும்.

தமிழகத்தில் காற்றாலை உற்பத்தி அதிகஅளவு நடந்து வருகின்றபோதிலும், தமிழக காற்றாலைகளில் பழைய கால தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த தொழில்நுட்பங்கள் பல நாடுகளில் காலாவதியாகி விட்டன. இந்த காற்றாலைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் டர்பைன்களை மாற்றி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தமிழகத்தின் காற்றாலை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உற்பத்திச் செலவு

குறைந்த செலவில் தரமான முறையில், வீணாகாமல் மின்சாரம் தயாரிப்பதே தற்போது தமிழகத்தின் முன்பு உள்ள சவலாகும் அனல் மற்றும் அணு மின்சார தயாரிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டினால், மிகப்பெரிய அளவில் நிதிநிலை மோசமாகவே வழி வகுக்கும். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பில் 35 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்சார தயாரி்ப்பு மற்றும் விநியோக நிறுவனத்திற்கு, 2013 - 14ம் ஆண்டில் 13,985 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ‘உதய்’ திட்டத்தில் சேர்ந்தன் மூலம் இந்த நஷ்டம் 2016- 17ல் மொத்தம் 3,783 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதுபோலேவே மின்சார இருப்பு நிலையும் சற்று உயர்ந்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் குறைந்த செலவு மின்சாரம் தயாரிக்கும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, குறைந்த செலவிலான மின்சாரம் தயாரிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது’’ என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

45 mins ago

விளையாட்டு

51 mins ago

வலைஞர் பக்கம்

4 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்