23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது

By செய்திப்பிரிவு

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழா வில் 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

நாட்டின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்ற பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு டெல்லியில் நேற்று நடந்த விழாவில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இந்தியில் ரமேஷ் குந்தால் மேக், தெலுங்கில் தேவிபிரியா, கன்னடத்தில் அசோகா உள்ளிட்ட 23 எழுத்தாளர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர். விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிர பட்டயம், சால்வை ஆகியவை வழங்கப்பட்டன.

தமிழில் ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை தொகுப்புக்காக மறைந்த கவிஞர் இன்குலாப்-க்கு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் விருதை ஏற்க மறுத்துவிட்டனர்.

சாகித்ய அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரசாத்தின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 31-ல் நிறைவடைந்தது. புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்