பட்ஜெட் 2018: அப்ப நல்லா கேட்டீங்க.. இப்ப மறந்துட்டீங்களே ஜேட்லி?

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. அதற்கு முன்பாக கடந்த 2014 ஏப்ரலில் அருண் ஜேட்லி அளித்த பேட்டியில், “தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம் 3 கோடி பேர் பயன் அடைவார்கள். அவர்கள் ரூ.24 கோடி அளவுக்கு தங்கள் வருமானத்தை சேமிக்க முடியும். இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தேசிய வரி நிதியில் 1.5 சதவீதம் அளவுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு நிதியமைச்சரான அருண் ஜேட்லி 2014 ஜூலையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினார்.

அதற்கு அடுத்து 4 பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்தார். ஒவ்வொரு முறையும் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்துவார் என்று நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

பதவிக்கு வரும் முன்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்திய அருண் ஜேட்லி, ரூ.3 லட்சம் வரைகூட உயர்த்தாதது ஏன் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்