இந்தியாவில் வசிப்பதில் மகிழ்ச்சி கொள்ளாதவர்களால் சமூகத்தில் பதற்றம்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் வசிப்பதில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘இந்தியாவில் 1857ம் ஆண்டு வரை சமூக நல்லிணக்கம் பெரிய அளவில் சீர்கெடவில்லை. பிரிட்டிஷ் அரசு தங்கள் சொந்த லாபத்திற்காக இந்துக்களையும், முஸ்லிகளையும் பிரித்தது. 1905ம் ஆண்டு முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. சமூகத்தில் தீவிரவாத கருத்துக்கள் விதைக்கப்பட்டன.

அதனை சிலர் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் வாழ்வதில் மகிழ்ச்சி அடையாதவர்கள் தான் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகின்றனர். ஆனால் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஈடுபடுகிறது.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நாட்டுக்காக பணியாற்றி வருகின்றனர். எங்களின் சமூக பணி தொடரும்’’ எனக்கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்