கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை

By பிடிஐ

 

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 இந்தியர்கள் சென்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் பிடித்து வைத்து இருந்தனர். இந்நிலையில், 4 நாட்களுக்குப் பின் நேற்று விடுதலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் இருந்து 'தி மரைன் எக்ஸ்பிரஸ்' எனும் எண்ணெய் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜிரியா நாட்டுக்குச் சென்றது. பெனின் நாட்டுக்கு அருகே கினியா வளைகுடா கடற்பரப்பில் சென்றபோது, கடந்த 1-ம் தேதி அந்த கப்பல் திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து பல்வேறு தேடுதலுக்கு பின், கடற் கொள்ளையர்கள் பிடித்து வைத்து இருப்பதாக செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில், 4 நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுக்கு பின் இப்போது, 22 இந்தியர்களையும், கப்பலையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.

இது குறித்து கடற் போக்குவரத்தின் இயக்குநர் மாலினி சங்கர் கூறுகையில், ''தி மரைன் எக்ஸ்பிரன் எனும் கப்பலை கடந்த 4 நாட்களாக கடற் கொள்ளையர்கள் பிடித்து வைத்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய பேச்சுக்கு பின் இப்போது விடுவிக்கப்பட்டது, கப்பலும், 22 இந்தியர்கள் பத்திரமாக புறப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை விடுவிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்னவிதமான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை.

இது குறித்து கப்பலின் மேலாளர் ஆங்கிலோ ஈஸ்டர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ''பனாமா நாட்டைச் சேர்ந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் பிடித்து வைத்து இருந்தனர். 4 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, கப்பல் புறப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்