ஹரியாணாவில் கறவை நின்றுபோன பசு மாட்டை கைவிட்டால் ரூ.5,100 அபராதம்: மாடு வளர்க்க அரசு நிதியுதவி

By செய்திப்பிரிவு

கறவை நின்றுபோன பசு மாடுகளை கைவிட்டு அவற்றை விரட்டிவிடுபவர்களுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. மாடுகளை வளர்ப்பதற்கு ஆண்டுதோறும் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆணைக்குழுவின் தலைவர் பானி ராம் மங்களா கூறிய தாவது:

பால் கொடுக்க முடியாமல் கறவை நின்றுபோன பசு மாடுகளை கைவிடுவோருக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும். இதற்காக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் உதவியோடு மொபைல் ஆப் உருவாக்கப்படும். அதன்மூலம் கைவிடப்பட்ட மாட்டின் அடையாள எண்ணை வைத்து அதன் இருப்பிடம் பற்றிய தகவல்கள் அறியப்படும்.

மேலும், பசுக்களை வளர்ப்பதற்காக கிராமங்களில் பசு பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். படித்த நபர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மையங்கள் செயல்படும். பசு பராமரிப்புக்கு ஆண்டுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.

இதுதவிர, பசுவின் சிறுநீர், சாணம் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சோப், ஊதுபத்தி போன்றவற்றை உருவாக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

36 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்