திருப்பதியில் நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடு: தேவஸ்தான தலைமை அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்கும் வகையில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பாலம் அமைக்க்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

பக்தர்களின் குறைகளை தொலைபேசியில் கேட்டறியும் ‘டயல் யுவர் இஓ’ என்ற நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் பேசும்போது, “பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க, இம்மாத இறுதிக்குள் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் நெரிசல் இன்றி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம். ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் இனி இலவச அன்ன பிரசாதம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு வார இறுதியிலும் தரிசன ஏற்பாடு செய்ய இயலாது” என்றார்.

இதனிடையே ஏப்ரம் மாதம் ஆர்ஜித சேவைகள் மூலம் ஏழுமலையானை தரிசிக்க 59,593 டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்